Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2025
01:06

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே, அமிர்த வர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், இன்று திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.


காரமடை அடுத்த பெள்ளாதி ஊராட்சி, சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்த வர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பத்தாம் ஆண்டு திருக்கல்யாணம் வைபவம், இன்று காலை நடைபெற்றது. கடந்த 22ம் தேதி இரவு கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. 23ம் தேதி மகா கணபதி ஹோமமும், விநாயகருக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, முகூர்த்தக்கால் நடப்பட்டது. 24ம் தேதி சின்னதொட்டிபாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. நேற்று விநாயகர் வழிபாடுடன் கோ பூஜை, ருத்ர பாராயணம், மகா ஹோமம், கலச அபிஷேகம், மகாதீபாரதனை ஆகியவை நடைபெற்றது. இன்று காலை மகா கணபதி வழிபாடுடன், மகா சங்கல்பம், மூலமந்திர மகா யாகம் கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து சின்னதொட்டிபாளையம், சேரன் நகர், நீலகிரி நெஸ்ட் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். காலை, 10:45 மணிக்கு மேல், 11:45 மணிக்குள் அமிர்த வர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருக்கல்யாண கோலத்தில் அமிர்தவர்ஷினி நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற உள்ளது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar