Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ... ஆய்க்குடி நவநீத கிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம் ஆய்க்குடி நவநீத கிருஷ்ணன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா
எழுத்தின் அளவு:
மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2025
05:07

சின்னமனூர்; சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் மாணிக்கவாசகருக்கென தனி கோயில் சின்னமனூரில் மட்டுமே உள்ளது. பிரசித்தி பெற்ற இக் கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு ஆனித் திருமஞ்சன விழா நடைபெறும். இந்தாண்டிற்கான நிகழ்ச்சி ஜூன் 22 ல் துவங்கியது. திருவிழாவில் 11 நாட்களும் மாலை மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வரபகவான் பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.

ஆனி திருமஞ்சன விழாவின் ஒரு பகுதியாக மாணிக்கவாசகர் குரு பூஜை ஜூன் 30 ல் நடைபெற்றது. குரு பூஜையை முன்னிட்டு அன்னதானத்தில் முக்கனிகள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஜூலை முதல் தேதி ஆனி உத்திரம் மற்றும் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை ஆனித் திருமஞ்சன திருவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த ஆனித் திருமஞ்சன விழாவில் மூன்று உற்சவர்கள், விநாயகர், சிவகாமியம்மன், நடராஜர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாணிக்கவாசகருக்கு பிரத்யேகமாக மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதங்களாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா , பரம்பரை அறங்காவலர் திருவாசகம், தமிழாசிரியர்கள் வெங்கடாச்சலம் , வேலு ஆகியோர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar