Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் ... அமர்நாத் யாத்திரை துவங்கியது; பனி லிங்கத்தை தரிசிக்க புறப்பட்ட பக்தர்கள் அமர்நாத் யாத்திரை துவங்கியது; பனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனி திருமஞ்சனம்; திருமுறை பாராயணம் செய்து பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆனி திருமஞ்சனம்; திருமுறை பாராயணம் செய்து பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2025
10:07

திருப்பூர்; ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மஹா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.


சிவாலயங்களில் உள்ள ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு, ஆருத்ரா தரிசனம் உட்பட, ஆண்டுக்கு ஆறுமுறை அபிஷேக பூஜை நடக்கிறது. அதில், ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாளில் நடக்கும் ஆனி திருமஞ்சனமும் முக்கியமானது. அதன்படி, சிவாலயங்களில் நேற்று ஆனித்திருமஞ்சன வைபவம் விமரிசையாக நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில்கள், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும் மஹா அபிஷேகம் நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காலை, 11:00 மணிக்கு துவங்கி, பஞ்சாமிர்தம், பால், தேன், இளநீர், பன்னீர் உட்பட, 16 வகை திரவியங்களால் ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் உச்சிக்கால பூஜையின் போது, அலங்கார பூஜை நடந்தது. சிவனடியார்களும், பக்தர்களும், பன்னிரு திருமுறை பதிகங்களில் இருந்து பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர். பூஜைகள் மற்றும் வழிபாடுகளை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar