காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வைபவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2025 11:07
காரமடை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இன்று வைணவ திருத்தலங்களில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வைபவம் கொண்டாடப்படுகிறது. இதில் கொங்கு நாட்டின் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இந்த வைபவம் சிறப்பாக நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை முடிந்து சக்கரத்தாழ்வார் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சுவாமி முன் திருமஞ்சனம் கண்டருளி, பட்டுடுத்து வீற்றிருந்தார். தொடர்ந்து மகா சங்கல்பம் மந்திர புஷ்பம் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அஷ்டோத்திரம் மற்றும் சாற்றுமுறை சேவிக்கப்பட்டது. இதில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.