Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் சேரும் குப்பையில் ... ஆடி மாதம் பிறப்பு; கோவில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் பரவசம் ஆடி மாதம் பிறப்பு; கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் வடக்குநாகர் கோவிலில் யானையோடு விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
 திருச்சூர் வடக்குநாகர் கோவிலில் யானையோடு விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2025
04:07

பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று "யானையூட்டு விழா நடந்தது.


கேரள மாநிலம், திருச்சூரில் பிரசித்தி பெற்ற வடக்குநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் 1ம் தேதி யானைகளுக்கு உணவு வழங்கும் "யானையூட்டு நிகழ்ச்சி, சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு "யானையூட்டு விழா இன்று நடந்தது. இதையொட்டி, தந்திரி புலியன்னூர் சங்கரநாராயணன் நம்பூதிரி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பிரம்மாண்ட மகாகணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், 12 ஆயிரம் கிலோ தேங்காய், வெல்லம், ஆவல் தலா இரண்டாயிரம் கிலோ, 500 கிலோ மலர், 80 கிலோ எள், 50 கிலோ தேன், எலுமிச்சை, கரும்பு, 3000 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டன. காலை, 7:00 மணிக்கு கஜ பூஜையும், தொடர்ந்து, "யானையூட்டு நிகழ்ச்சியும் நடந்தன. "யானையூட்டு நிகழ்ச்சியை கோவில் மேல்சாந்தி செறுமொக்கு ஸ்ரீராஜ் நாராயணன் நம்பூதிரி துவக்கி வைத்தார். மேற்கு கோபுர நடை வாயிலாக நுழைந்த, 70 யானைகள் கோவில் வளாகத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அவற்றுக்கு, 500 கிலோ அரிசியால் சமைத்த உணவுடன், மஞ்சள், நெய், வெல்லம் சேர்ந்து வழங்கி கொண்டாடினர். இது தவிர, அன்னாசி, வெள்ளரி, தர்பூசணி, பழம் என எட்டு வகையான பழங்களும் யானைகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்குப் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மத்திய பெட்ரோலியம் துறை இணை அமைச்சர் சுரேஷ்கோபி, திருச்சூர் மேயர் வர்கீஸ், கலெக்டர் அர்ஜுன் பாண்டே, சிட்டி போலீஸ் கமிஷனர் இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சி கலந்து கொண்டனர். மாலையில், சுற்று விளக்கு ஏற்றுதல், நிறமாலை தரிசனம், தீபாராதனை மற்றும் சிறப்பு பகவதி சேவை ஆகியவை நடைபெற்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar