திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, இன்று காலை மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.