Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி மணக்குள விநாயகர் ... கும்பாபிஷேகத்திற்கு கலசநீர் எடுக்கும் போது குளத்தில் விநாயகர் சிலை கண்டெடுப்பு கும்பாபிஷேகத்திற்கு கலசநீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் வரும் 24ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் வரும் 24ம் தேதி துவக்கம்

பதிவு செய்த நாள்

03 செப்
2025
10:09

திருமலை – திருப்பதியில்  ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக விழாவான நவராத்திரி  பிரம்மோற்சவம் இந்தாண்டு செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 02 வரை நடைபெற உள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும்  இந்த விழாவில்,நாள்தோறும் விதவிதமான வாகன உலா  நடைபெற உள்ளது. திருமலையில் வருடம் முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.  அவற்றில் உச்சமாகக் கருதப்படுவது வருடாந்திர பிரம்மோற்சவம் தான். “மக்கள் கடல்” என்று அழைக்கப்படும் அளவுக்கு பக்தர்கள் கூடுவர்,விழாவின் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ மலயப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடனும்,சில  நாட்களின் தனியாகவும்  பல்வேறு வாகனங்களில் திருவீதிகளில் உலா வந்து பக்தர்களை அருள்பாலிப்பார்.சுவாமி உலா  வரும்போது அவருக்கு முன்பாக   மாடவீதியில்  பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.


செப்டம்பர் 23 மாலை – அங்குரார்ப்பணம் : விதைகள் நட்டுச் செய்யப்படும் தொடக்கச் சடங்கு. காலை சேவை – 8 மணி முதல் 10 மணி வரை. மாலை சேவை – 7 மணி முதல் 9 மணி வரை


தினந்தோறும் நடைபெறும் வாகன சேவைகள்


24/09/2025 – த்வஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) மாலை 5.43 – 6.15, இரவு 9 மணிக்கு பெரிய  சேஷ வாகனம்.

25/09/2025 – காலை சின்ன சேஷ வாகனம்,  இரவு ஹம்ச வாகனம்.

26/09/2025 – காலை சிம்ம வாகனம்,  இரவு முத்து பந்தல் வாகனம்.

27/09/2025 – காலை கற்பகவிருட்ச  வாகனம், இரவு சர்வபூபால வாகனம்.

28/09/2025 – காலை மோகினி அவதாரம், மாலை கருட வாகனம்.

29/09/2025 – காலை ஹனுமந்த வாகனம், மாலை தங்க ரதம், இரவு கஜ வாகனம்.

30/09/2025 – காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபை.

01/10/2025 – காலை ரத ஊர்வலம், இரவு குதிரை வாகனம்.

02/10/2025 – காலை சக்ரஸ்நானம் (6 மணி – 9 மணி), இரவு கொடியிறக்கம் (8.30 – 10 மணி).


பிரம்மோற்சவ நாட்களில் திருமலை எங்கும்  வண்ண விளக்குகளால் ஜொலிக்கும், ஆன்மீக  பஜனை, வேத பாராயணம், இசை, பக்திப் பாடல்கள் என்று பக்தர்களின் மனங்களை உயர்த்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும், கருட வாகன சேவை போன்ற சிறப்பு நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்குகூடும்.பிரம்மோற்சவ விழாவல் கலந்து கொள்ளவும் பெருமாள் பேரருளைப் பெறவும் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவர் அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் விழா இன்று 6ம் தேதி துவங்குகிறது. முதல் நாளான ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்; தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில், பழமை வாய்ந்த முழியன்குளம் சீரமைக்கும் பணி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar