Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ... சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன் சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
எழுத்தின் அளவு:
வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்

பதிவு செய்த நாள்

17 செப்
2025
03:09

போடி; போடி அருகே வடமலைநாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் வடமலைநாச்சியம்மன் கோயில் உள்ளது. 650 ஆண்டுகளுக்கு முன்பு கண் கொடுத்த ராசு நாயக்கர் என்பவர் காலத்தில் இக்கோயில் உருவானது. போடியில் இருந்து ஏழு கி.மீ., தூரம் ரோடு வசதியும், இரண்டு கி.மீ., தூரம் ரோடு இன்றி மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். இக்கோயிலில் வாரம் தோறும் வெள்ளி, மாதம் தோறும் பவுர்ணமி பூஜைகள் நடப்பது வழக்கம். முன்பு பாதை வசதி இல்லாமல் இருந்தது. தற்போது வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் கோயில் நிர்வாகம், விவசாயிகள் இணைந்து பாதையின் இருபுறமும் ஆக்கிரமிப்பில் இருந்த செடிகள் அகற்றி, இரண்டு கி.மீ., தூரம் ரோடுக்கான பாதை வசதி ஏற்படுத்தினர். தற்போது ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு நடந்து செல்லவும், அப்பகுதி விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பக்தர்கள், விவசாயிகள் பயன் பெறும் வகையில் வடமலைநாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல ரோடு வசதி அமைத்து தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar