Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதல் புரட்டாசி சனிக்கிழமையை ... இறைவழிபாடால் சக்தி கிடைக்கும் சிவனடியார் மீனாட்சி தேவி இறைவழிபாடால் சக்தி கிடைக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தரிசனம்

பதிவு செய்த நாள்

21 செப்
2025
12:09

திருப்புல்லாணி: புரட்டாசி முதல் சனிக்கிழமையில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.


வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் திகழ்கிறது. புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆதி ஜெகநாதப்பெருமாள், பத்மாஸனி தாயார், தெர்ப்பசயன ராமர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பக்தர்களின் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டும், தேவையான இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டும் இருந்தது. உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை, கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது.பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டன.


ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த கார்கள், டூவீலர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


* தொண்டியில் உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடியில் லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வரதராஜ பெருமாள் மற்றும் குளத்துார் உள்ளிட்ட பல கிராமங்களில் பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 
temple news
  திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar