Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஸ்கான் சார்பில் பல்லக்கில் பகவான் ... ஆண்டாள் நாச்சியார் கோவிலில் புரட்டாசி பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; பக்தர்கள் குவிந்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

22 செப்
2025
03:09

செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு புரட்டாசி மாத மாகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு அதிகாலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்ககவச அலங்காரமும் செய்தனர். இரவு 10.40 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வாத்தியங்கள் முழங்க அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். பூசாரிகள் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். 11.40 மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழுத்தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் எஸ்.பி.சரவணன் சரவணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, வேலூர், புதுச்சேரி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் ,சிறப்பு பஸ்களை இயக்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar