நவராத்திரி விழா : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்ரீ சக்கரம் சுவாமிக்கு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2025 05:09
ராமேஸ்வரம்; நவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் ஸ்ரீ சக்கர சுவாமிக்கு அபிஷேகம் பூஜை நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் பர்வதவர்த்தினி அம்மனுக்கு நவராத்திரி விழா காப்பு கட்டி திருவிழா துவங்கியது. முதல் நாளான இன்று கோயிலில் அம்மன் சன்னதி அருகே ஸ்ரீ சக்கர சுவாமிக்கு, கோயில் குருக்கள் உதயகுமார் மஞ்சள், பால், தயிர், பன்னீர் அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரவு பர்வதவர்த்தினி அம்மன் முத்தங்கி சேவை கோலத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 2ம் நாளான நாளை (செப்., 23) அன்னபூரணி அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளார்.