Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் நவராத்திரி விழா; ... அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்காதேவி கோயிலில் சண்டிஹோமம் அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்காதேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவிலில் கோலாகலமாக துவங்கிய நவராத்திரி விழா; குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி முருகன் கோவிலில் கோலாகலமாக துவங்கிய நவராத்திரி விழா; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

23 செப்
2025
10:09

சென்னை; வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி விழா துவங்கியது.


வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு விழா, நேற்று துவங்கியது. வரும் 1ம் தேதி வரை நடக்கும் விழாவில், ‘சக்தி கொலு’ எனும் பெயரில் பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது. பெண் பக்தர்கள் ஒருங்கிணைந்து, குத்துவிளக்கேற்றி நேற்று விழாவை துவக்கி வைத்தனர். மேலும், காலை, மாலை வேளைகளில், அம்மன் கொலு மண்டபத்தில், சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று, அம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கொலுவை ரசித்தனர்.


பின், பக்தர்களுக்கு ஆன்மிக வினாடி – வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கொலுவை ரசித்த சிறுவர் – சிறுமியருக்கு சிறப்பு பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நேற்று மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினர் கொலுபாட்டு நடத்தப் பட்டது. அதைத்தொடர்ந்து நிருத்யர்பணம் நடனப்பள்ளி மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கணேசின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியும் நடந்தது. வடபழனி முருகன் கோவில் கொலுவை காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணிவரையும் கண்டு களிக்கலாம். மாபெரும் கொலு கண்காட்சி அதேபோல, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி பெருவிழா நேற்று துவங்கியது. நவராத்திரி விழாவை அமைச்சர் சேகர்பாபு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.


கவர்னர் மாளிகையை அலங்கரிக்கும் ‘கொலு; நவராத்திரியை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் மாளிகையில் கொலு அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று, கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு விழா துவங்கியது. கவர்னர் ரவி துவக்கி வைத்து கொலுவை பார்வையிட்டார். வரும் 1ம் தேதி வரை நடக்கும் விழாவில், தினமும் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை வழிபாடு மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. ‘ஆன்லைன்’ மூலம் ஏற்கனவே பதிவு செய்த நபர்கள் மட்டுமே, கொலுவை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவர் என, கவர்னர் மாளிகை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar