Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி இரண்டாம் நாள்; ... காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் நவராத்திரி கொலு தர்பார் துவங்கியது காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதியில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்; தினமும் பக்தர்களுக்கு 8 லட்சம் லட்டு
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதியில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்; தினமும் பக்தர்களுக்கு 8 லட்சம் லட்டு

பதிவு செய்த நாள்

23 செப்
2025
03:09

திருப்பதி; திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நாளை (24/9/2025) முதல் விமரிசையாக நடைபெறுகிறது.


ஆண்டு முழுவதும் திருமலையில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில்  பிரம்மோற்சவ விழா  மிகப்பெரும் திருவிழாவாகும் லட்சக்கணக்கான  பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.ஐந்தாம் நாளான்று மூலவரே கருட வாகனத்தில் பக்தர்களை தேடி வருவதாக மக்கள் நம்புவதால், அந்த நாளில் பக்தர்கள் எண்ணிக்கை பல லட்சங்களை தொடும். ஒவ்வொரு நாளும் காலை 8 மணி, மற்றும் இரவு  7 மணி க்கு சுவாமி புறப்பாடு இருக்கும்.உற்சவரான ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் (சில சமயங்களில் தனியாக) விதம் விதமான வாகனங்களில் மாடவீதிகளில் வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா நாட்களில் தினமும் 1.16 லட்சம் சிறப்பு தர்ஷன் டிக்கெட் வழங்கப்படும்; வி.ஐ.பி தர்ஷன் கிடையாது. 36 பெரிய திரைகள் மூலம் வாகன சேவைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். தினசரி 8 லட்சம் லட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். கருட சேவையின் போது 14 வகை உணவுகள் இலவசமாக வழங்கப்படும். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் மலர்கண்காட்சி பக்தர்களிடையே சிறப்பாக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஆண்டு 3.5 கோடி ரூபாய் செலவில் 60 டன் மலர்களைக் கொண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. 28 மாநிலங்களைச் சேர்ந்த  கலாச்சார குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.


முக்கிய நிகழ்வுகள்


24/09/2025 – காலை கொடி ஏற்றம். இரவு 9 மணி: பெரிய சேஷ வாகனம்


25/09/2025 – காலை 8 மணி: சின்ன சேஷ வாகனம், மதியம் 1–3 மணி: ஸ்னபனம், மாலை 7 மணி: ஹம்ஸ வாகனம்


26/09/2025 – காலை 8 மணி: சிம்ம வாகனம், மதியம் 1 மணி: ஸ்னபனம், மாலை 7 மணி: முத்துப்பந்தல் வாகனம்


27/09/2025 – காலை 8 மணி: கல்பவிருட்ஷ வாகனம், மதியம் 1 மணி: ஸ்னபனம், மாலை 7 மணி: சர்வபூபால வாகனம்


28/09/2025 – காலை 8 மணி: மோகினி அவதாரம், மாலை 6:30 மணி: கருட வாகனம்


29/09/2025 – காலை 8 மணி: அனுமந்த வாகனம், மதியம் 4 மணி: பொன்னிரதம், மாலை 7 மணி: கஜ வாகனம்


30/09/2025 – காலை 8 மணி: சூர்ய பிரபை வாகனம், மாலை 7 மணி: சந்திர பிரபை வாகனம்


01/10/2025 – காலை 7 மணி: தேரோட்டம், மாலை 7 மணி: அசுவ வாகனம்


02/10/2025 – காலை 6–9 மணி: சக்ரஸ்நானம், இரவு 8:30–10 மணி: கொடி இறக்குதல்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar