திருக்கோவிலூர் ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2025 11:09
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர், ராகவேந்திரர் கோவிலில் நவரா திருவிழாவின் 8ம் நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு ராகவேந்திரர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு கொலு மண்டபத்தில் நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. 9:00 மணிக்கு அம்பிகைக்கு மகா தீபாராதனை, ஏராளமான கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. கோவில் நிர்வாகி கோபிகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.