Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருளில் மூழ்கும் ராமேஸ்வரம் கோயில் ... பகவதி அம்மன் கோவிலில் துர்காஷ்டமி விழா பகவதி அம்மன் கோவிலில் துர்காஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டையில் புரட்டாசி பிரமோத்ஸவ திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டையில் புரட்டாசி பிரமோத்ஸவ திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

30 செப்
2025
04:09

சிவகங்கை; நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா செப்., 25 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் காலசந்தி ஹோமம் , பலி, திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இரவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் அன்னம், சிம்மம், அனுமன், சேஷ, யானை, வெள்ளி கேடயம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


விழாவின் 6 ம் நாளான இன்று காலை 11:00 மணிக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். இன்று மதியம் 12:05 மணிக்கு பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு கோயிலில் சாயரட்சை, ஹோமம், திருவாராதனம் நடக்கிறது.


புன்னைமர வாகனத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக அக்.,3 ம் தேதி காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் எழுந்தருள்வார். சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்திய பின் தேங்காய்கள் உடைத்து அன்று காலை 9:10 முதல் 10:25 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. அக்.,4 ல் தீர்த்தவாரி உற்சவம், மாலையில் கொடியிறக்கமும் நடைபெறும். அக்., 5 ல் ஊஞ்சல் உற்சவத்துடன் பிரமோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது. தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன் தலைமையில் ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar