Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் ... கட்டுமானப் பணியின் போது பழமையான சிலைகள் கண்டெடுப்பு கட்டுமானப் பணியின் போது பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?

பதிவு செய்த நாள்

06 அக்
2025
10:10

மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” என, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.


இதுகுறித்து, அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு காலத்தில், தமிழகம் முழுதும் 3,707 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் 23.70 கோடி ரூபாய் செலவில் செய்யப்படுகிறது. இந்தப் பணிகளை டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்லது. கோவில் வளாகத்தில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில், 2018ம் ஆண்டு பிப்ரவரியில் தீ விபத்து ஏற்பட்டது. அதைப் புதுப்பிக்க தேவைப்படும் கற்களை எடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது உண்மை தான். ஒரே நீளமாக, 15 அடிக்கு கல் கிடைப்பது கடினம். அந்தப் பணிகள், 35.50 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. மொத்தமுள்ள 79 துாண்களில் 18 துாண்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதி துாண்கள் செதுக்கும் பணி நடக்கிறது. அதில், 11 துாண்கள் அக்., 15 க்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் பணிகளும் டிசம்பரில் நிறைவுபெறும். பணிகள் நிறைவடைந்த பின், பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்துவதா அல்லது வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து டிசம்பர் மாதமே கும்பாபிஷேகம் நடத்துவதா என்பதை கோவில் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மீனாட்சி கோவிலுக்கு உட்பட்ட 18 உபகோவில்களில் ஒன்பது கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. நவம்பர் மாத இறுதிக்குள் மேலும் நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். மற்ற உப கோவிஉல்களுக்கு பிப்ரவரி இறுதிக்குள் நடத்தப்படும். திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் அமைப்பது குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்து இறுதி வடிவம் கேட்டுள்ளோம். அது வந்தவுடன் டெண்டர் கோரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar