Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேரெழுந்துார் சிவன் கோவில் ... வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மதுரை மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகமா?; அரசுக்கு ஆபத்து என எச்சரிக்கை வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை தங்க கவசம் எடை குறைந்தது எப்படி? சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது ஐகோர்ட்
எழுத்தின் அளவு:
சபரிமலை தங்க கவசம் எடை குறைந்தது எப்படி? சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது ஐகோர்ட்

பதிவு செய்த நாள்

07 அக்
2025
11:10

கொச்சி: சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.


கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.


செப்பு கவசங்கள்; இம்மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெ ற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின் கருவறை முன்பாக உள்ள துவாரபாலகர்கள் சிலைக்கு தங்கமுலாம் பூசிய செப்பு கவசங்களை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் நன்கொ டையாக வழங்கினார். இந்த தங்க கவசத்தை பழுது பார்த்து, எலக்ட்ரோ பிளேட்டிங் செய்ய, சென்னையில் உள்ள தொழிற்சாலைக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுப்பி வைத்தது. அப்போது தேவசம் போர்டு ஆணையரின் அனுமதியின்றி, தங்க கவசம் கழற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனால், சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்க கவசங்களை உடனடியாக திரும்ப கொண்டு வருமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதே நேரம், தங்க கவசத்தின் எடை 4 கிலோ வரை குறைந்து இருப்பதாக புகார் எழுந்தது. மேலும், துவாரபாலகர்களின் தங்க பீடமும் மாயமானதாக குற்றஞ் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேவசம் போர்டின் ஊழல் தடுப்பு குழுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


நன்கொடை அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய ஊழல் தடுப்புக் குழு, காணாமல் போனதாக கூறப்பட்ட தங்க பீடத்தை, நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்டது. பழுது பார்த்த பின், பீடம் சரியாக பொருந்தாததால், மீண்டும் தேவசம் போர்டு தன் உதவியாளரிடம் கொடுத்து அனுப்பியதாகவும், அந்த விவகாரத்தை தான் மறந்து போனதாகவும் உன்னிகிருஷ்ணன் போத்தி விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பாக இரண்டு நாட்கள் வரை உன்னிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய தேவசம் போர்டு ஊழல் தடுப்புக் குழு, கேரள உயர் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இதை தொடர்ந்து துவாரபா லகர்கள் சிலையில் அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்தது குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள உயர் நீதிமன்றம் நேற்று அமைத்தது. எஸ்.பி., சசிதரன் தலைமையில், ஏ.டி.ஜி.பி., வெங்கடேஷ் மேற்பார்வையில், இக்குழு செயலாற்றும் எனவும் அறிவித்துள்ளது. சைபர் கிரைம் பிரிவை சேர்ந்த அதிகாரிகளும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். கேரள உயர் நீதிமன்றத்தின் இந்நடவடிக்கைக்கு தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar