Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரம்பரிய பொங்கல் விழா; பக்தர்கள் ... சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்த தருமபுரம் ஆதீனம் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி மழைச்சோறு வழிபாடு செய்த கிராம மக்கள்
எழுத்தின் அளவு:
மழை வேண்டி மழைச்சோறு வழிபாடு செய்த கிராம மக்கள்

பதிவு செய்த நாள்

07 அக்
2025
04:10

பல்லடம்; பல்லடம் அருகே, பெருமாகவுண்டம்பாளையம் கிராம மக்கள், மழை வேண்டி மழைச்சோறு எடுத்து வழிபாடு செய்தனர்.


ஒவ்வொரு ஆண்டும் பருவமழை முறையாக கிடைத்தால் மட்டுமே, குடிநீர் தட்டுப்பாடு நீங்காவதுடன், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதும் சிரமம் இன்றி நடக்கும். பருவ மழை பொய்க்கும் போது, விவசாயிகள், கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல்லடம் வட்டார கிராமங்களில் இது பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு, பல்லடத்தை அடுத்த, கோடங்கிபாளையம் ஊராட்சி, பெருமாகவுண்டம்பாளையம் கிராம மக்கள், பருவமழை வேண்டி, மழைச்சோறு எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக, ஊர் பெரியவர்களின் ஆலோசனையை பின்பற்றி, வீடு வீடாக சென்று மழைச்சோறு சேகரித்தனர். தொடர்ந்து, கும்மியாட்டம் பாடியபடி, மழைச்சோறு வேண்டி பிரார்த்தனை செய்தபடியும், பயணத்தைத் தொடர்ந்தனர். அங்குள்ள விநாயகர் கோவிலிற்கு சென்று சேகரித்த உணவு மற்றும் பொங்கல் வைத்து, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபாடு செய்தனர். பொதுமக்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பல்லடம் பகுதியில் வரட்சி நிலவுகிறது. எனவே, மழை வேண்டி மழைச்சோறு வழிபாடு மேற்கொண்டோம். இதன் மூலம் மழை கிடைக்கும் என்ற நம்பிக்கையால், ஆண்டாண்டு காலமாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar