Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை; மூலவருக்கு திருமஞ்சனம் காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜசோழனின் 1040வது சதய விழா பெரியகோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜராஜசோழனின் 1040வது சதய விழா பெரியகோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

21 அக்
2025
12:10

தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு, ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, சதய விழா என்ற பெயரில், இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சதய விழா வரும் அக்.,31ம் மற்றும் நவ.1ம் தேதிகளில் நடைபெறுகிறது.


இதையொட்டி, பெரிய கோவிலில், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் செல்வம்,அரண்மனை தேவஸ்தான உதவி கமிஷனர் கவிதா ஆகியோர் முன்னிலையில், பந்தல்கால் முகூர்த்தம் செய்யப்பட்டது. முதலில், பந்தல்காலுக்கு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரணை காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். சதய விழாவை முன்னிட்டு, வரும் அக்., 31 ம் தேதி பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். தொடர்ந்து நவ., 1ம் தேதி காலை தேவார நுாலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதிவுலா நடைபெறும். பிறகு, பெரிய கோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். ராஜராஜ சோழன், உலகமாதேவி ஐம்பொன் சிலைக்கு சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும். இரவு ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதிவுலா நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar