Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் வட்டார முருகன் கோவில்களில் ... சிறுபாக்கம் அருகே இடிந்து விழுந்த கோவில் கோபுரம்; அமைச்சர் ஆய்வு சிறுபாக்கம் அருகே இடிந்து விழுந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

22 அக்
2025
03:10


திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் இன்று துவங்கியது. கோயிலில் காலை 7:00 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்கை விநாயகர் முன்பு யாக பூஜை நடந்தது. ‌தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு பூஜை முடிந்து விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கியது.


சுவாமிக்கு காப்பு கட்டுதல்: முதலில் ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, பின்பு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்பட்டபின்பு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர். காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் திருவிழா நடக்கும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். தினம் உச்சிகால பூஜை முடிந்த பின்பு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, மாலையில் சர்க்கரை, எலுமிச்சம்பழச்சாரும், இரவு பாலும் இலவசமாக வழங்கப்படும். 


சூரசம்ஹாரம்: தினம் இரவு 7:00 மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பர். தினம் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 11:00 மணி, மாலை 5:00 மணிக்கு சண்முகார்ச்சனையும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக். 26ல் வேல் வாங்குதல், அக். 27ல் சூரசம்ஹார லீலை, அக். 28 காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் சட்டத் தேரில் எழுந்தருளி ரதவீதிகள் , கிரிவீதியில் தேரோட்டம், மதியம் 3:00 மணிக்கு மூலவர் முன்பு தயிர் சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும். காப்பு கட்டும் நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, சண்முகசுந்தரம், திமுக வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி கலந்து கொண்டனர். பாண்டியன் நகர்: கல்யாண விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து சந்தனக்காப்பு அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது. சஷ்டி திருவிழா நடைபெறும் 7 நாட்களிலும் சிறப்பு அலங்காரமும். அக்.28 அன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 


திருநகர்: சித்தி விநாயகர் கோயிலில் சஷ்டி திருவிழா துவங்கும் வகையில் இன்று மூலவர் முருகப்பெருமானுக்கு மஹா அபிஷேகம், உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகப் பெருமானுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஸ்கந்த ஹோமம், சத்ரு சம்ஹார த்ரிசதி அர்சாசனை நடந்தது. நவ. 27ல் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம், நவ. 28ல் சீர்தட்டு அழைத்தல் , திருக்கல்யாணம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar