Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் ... மழையில் நனைந்து வீணாகி வரும் திருக்கச்சூர் கோவில் தேர் மழையில் நனைந்து வீணாகி வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் ஜரூர்; பக்தர்களால் 21 ஆண்டுக்கு பின் விமோசனம்
எழுத்தின் அளவு:
அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் ஜரூர்; பக்தர்களால் 21 ஆண்டுக்கு பின் விமோசனம்

பதிவு செய்த நாள்

25 அக்
2025
04:10

பொன்னேரி: பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில், 21 ஆண்டுகளுக்கு பின் பக்தர்களின் நிதியுதவியால், வெளி பிரகார சுற்றுச்சுவர், உள்பிரகார தரைத்தளம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.


பொன்னேரியில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், 800 ஆண்டுகள் பழமையானது. இது, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அழகிய துாண்கள், சிற்பங்கள் என, சோழர்களின் கட்டட கலைக்கு சான்றாக இக்கோவில் அமைந்துள்ளது. அகத்திய முனிவர் வழிபட்ட ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலில் அகத்தீஸ்வரர், விநாயகர், ஆனந்தவல்லி தாயார் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் அமைந்துள்ளன. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம், அரிஅரன் சந்திப்பு திருவிழா, பிரதோஷம், சிவராத்திரி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவர்.


கடந்த 2004ல், இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய நிலையில், அதற்கான நடவடிக்கை இல்லாததால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். ஹிந்து சமய அறநிலையத் துறையினரிடம், பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அறங்காவலர் குழுவினரின் முயற்சியால், தற்போது அகத்தீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் துவங்கப்ட்டு உள்ளன. வெளி பிரகாரத்தில் பல ஆண்டுகளாக சேதமடைந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டு, பாறை கற்களை கொண்டு புதியதாக அமைக்கப்படுகிறது. உள்பிரகாரத்தில் கோவிலை சுற்றிலும் தரைதளம் அமைப்பது, விநாயகர் கோவிலை, ‘லிப்டிங்’ தொழில்நுட்பத்தில் உயர்த்தி புதுப்பிப்பது என, 3 கோடி ரூபாயில் திருப்பணிகள் பணி நடைபெறுகிறது. மேலும், ராஜகோபுரம், அம்மன், மூலவர், உத்சவர் சன்னிதிகளின் கோபுரங்களும் புனரமைக்கப்பட்டு வருகிறது. திருப்பணிகளுக்கு செலவினங்கள், பக்தர்களின் நிதியுதவியால் செய்யப்படுகிறது. பல்வேறு பணிகள் நடைபெறும் நிலையில், பக்தர்களின் நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் திருப்பணக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்திற்கு முன், திருப்பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், 21 ஆண்டுகளுக்கு பின் விமோசனம் கிடைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள்‌ கோவிலில், மாசி அமாவாசையை முன்னிட்டு மூன்று நாள் தெப்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar