Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி திருஆவினன்குடி கோயிலில் ... திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் விமரிசை திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகிலமெங்கும் படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேக வைபவம்
எழுத்தின் அளவு:
அகிலமெங்கும் படியளக்கும் பரமனுக்கு அன்னாபிஷேக வைபவம்

பதிவு செய்த நாள்

06 நவ
2025
10:11

திருப்பூர்: திருப்பூர் வட்டார சிவாலயங்களில் அன்னாபிஷேக வழிபாடு விமரி சையாக நடந்தது. அகிலத்துக்கு படியளக்கும் பரமனை, மெய்யுருக பக்தர்கள் வழிபட்டனர்.


திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், குட்டகம் மொக்கணீஸ்வரர் கோவில், மேற்குபதி அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அலகுமலை ஆதிகைலாசநாதர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில்.  எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், லட்சுமிநகர் அண்ணாமலையார் கோவில், திருநீலகண்டபுரம் திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக் குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும் நேற்று அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. நேற்று மதியம், லிங்கத்திருமேனிக்கு, பால், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி உட்பட, 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிவலிங்கத்துக்கு வடித்த அன்னம்சாற்றி, அன்னாபிேஷகம் நடந்தது.


அன்னத்துடன், பல்வகை காய்கறிகள், பழவகைகள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அன்னாபிேஷகத்தில் அருள்பாலித்த சிவபெருமானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அன்னாபிேஷகம் கலையப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அன்னாபிேஷக சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விஸ்வேஸ்வரசுவாமி கோவில் திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மதியம் அபிேஷகமும், அன்னாபிஷேகமும் நடைபெற்றது. மாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5:30 மணி வரை, மகா அன்னாபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது; 6:30 மணிக்கு, அன்னாபிஷேகம் கலைந்து, சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் சம்பத் சார்பில், அன்னாபிஷேகத்தையொட்டி, தேவாரம் மற்றும் திருவாசக முற்றோதல் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் கிட்டப்பா – வயலின், கோபிசெட்டிபாளையம் சண்முகம் –மிருதங்க இசையில், அவிநாசிதாசனின் தேவார, திருவாசக பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar