Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் மலையில் ... சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விஷ்ணு துர்கைக்கு சிறப்பு பூஜை சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விஷ்ணு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் துவங்கியது; முட்டுக்கொடுத்து தேரை தள்ளிய யானை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம் துவங்கியது; முட்டுக்கொடுத்து தேரை தள்ளிய யானை!

பதிவு செய்த நாள்

14 நவ
2025
02:11

பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று துவங்கியது.


கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர்திருவிழா, ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று துவங்கியது. இதை முன்னிட்டு, சுவாமிக்கும், அம்பாளுக்கும் நடந்த திருக்கல்யாணத்தை பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரம்ணியர், கணபதி சுவாமிகள், அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்களில் எழுந்தருளினர்.


பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைலாசபதே, மகாகணபதிக்கு ஜெய், சுப்பிரமணிய சுவாமிக்கு ஜெய் என பக்தி கோஷங்களை முழங்கியபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். பக்தர்களுக்கு இழுப்பதற்கு உதவும் வகையில் புதுப்பள்ளி அர்ஜுன் என்ற யானை தேரை பின்னாலிருந்து முட்டுக்கொடுத்து தள்ளின. கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் தேர்கள் பவனி வந்தன. தொடர்ந்து காலை 11:00 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில தலைமை போலீஸ் அதிகாரி ராவாடா சந்திரசேகர் விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பீடு செய்ய வந்திருந்தார். 


விழாவில், இரண்டாம் நாளான நாளை மந்தக்கரை மகா கணபதி கோவில் தேர், திருவீதிகளில் வலம் வருகிறது. நாளை மறுநாள்பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேரோட்டமும், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி கோவில் தேரோட்டமும் துவங்குகின்றன. அன்று மாலை, 6:00 பணியளவில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, தேர் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது. விழாவையொட்டி மாவட்ட எஸ்.பி., அஜித் குமார் மேல்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar