Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜபாளையம் சிவன் கோயில்களில் ... கார்த்திகை சோமவார பிரதோஷம் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு கார்த்திகை சோமவார பிரதோஷம் பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 நவ
2025
12:11

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளான நேற்று சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்கியுள்ளனர்.


மூலவர் ஐயப்பனுக்கு அஷ்டபிஷேகம், சங்கரன், சங்கரி, நவக்கிரகங்கள், மஞ்சமாதா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். 48 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் வல்லபை ஐயப்பன் கோயிலில் நடக்கிறது. வருகிற டிச., 27 அன்று பேட்டை துள்ளல் மற்றும் ஆராட்டு விழா, மண்டல பூஜை உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்கின்றனர். முதுகுளத்துார்: மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கார்த்திகை மாத பிறப்பு பூஜை நடந்தது. குருநாதர் திருமால் தலைமை வகித்தார். துணைக்குருநாதர் புயல்நாதன், தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். கணபதி ஹோமம் பூர்ணாஹூதி, யாகசால பூஜைகள் நடந்தது.படிபூஜை,பஜனை வழிபாடு நடந்தது. பக்தர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. பரமக்குடி: சபரிமலை மண்டல பூஜையை ஒட்டி பாரதி நகர் ஐயப்பன் கோயிலில் சரண கோஷம் முழங்க பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல் தரைப்பாலம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் அபிஷேகம் நடந்தது. எமனேஸ்வரம் தர்ம சாஸ்தா கோயிலில் அபிஷேகம் நடந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தனர். பரக்குடியில் உள்ள பெருமாள், ஈஸ்வரன், முருகன் கோயில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar