Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஷ்டலஷ்மி கோயிலில் ஆதி பிரம்மனுக்கு ... 9ம் நுாற்றாண்டு மூத்த தேவி சிற்பம் உத்திரமேரூர் அருகே கண்டெடுப்பு 9ம் நுாற்றாண்டு மூத்த தேவி சிற்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ திருமுறை பயிலும் மாணவர்களுக்கு தீட்சை, ஆசி வழங்கிய ஆதீனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ திருமுறை பயிலும் மாணவர்களுக்கு தீட்சை, ஆசி வழங்கிய ஆதீனம்

பதிவு செய்த நாள்

20 நவ
2025
04:11

மயிலாடுதுறை; திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ சித்தாந்தம், சைவ திருமுறை பயிலும் மாணவர்களுக்கு சமய தீட்சை மற்றும் விசேட சிவபூஜை தீட்சை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் அருளி ஆசி வழங்கினார். 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் 14 ஆம் நூற்றாண்டில் நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது இந்த ஆதீனத்தில் 24வது குருமகாசநிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிய பிரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் சார்பில் தமிழகம், இலங்கை மலேசியா உள்ளிட்ட பல இடங்களில் 70க்கும் மேற்பட்ட சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையங்கள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையங்கள் தனித்தனி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இயங்கி வருகிறது. 2 ஆண்டு காலம்  பயிற்சி அளிக்கப்படுகிறது. 


இப்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு இவ்வாண்டு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தீட்சை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.  ஆதீன ஆன்மார்த்த மூர்த்தி ஞானமா நடராஜ பெருமான் பூஜை மற்றும் குரு முதல்வர் நமசிவாய மூர்த்திகள் பூஜையை தொடர்ந்து ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆண்டிமடம், மதுரை, சேலம் தலைவாசல், தஞ்சாவூர், செங்கம் ஆகிய ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையம் மற்றும் ஆதீன சைவத் திருமுறை நேர்முக பயிற்சி மைய மாணவர்களுக்கு சமய தீட்சை மற்றும் விசேட தீட்சை அருளி ஆசி வழங்கினார். தொடர்ந்து வரும் கார்த்திகை மாதம் 30 நாட்களும் அனைத்து  மையங்களிலும் பயிலும் மாணவர்களில் 250 பேருக்கு விசேட சிவ பூஜை தீட்சையும், 750 பேருக்கு சமய தீட்சையும் அளிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை பயிற்சி மையங்களின் இயக்குனர்கள்,  அமைப்பாளர்கள் மற்றும் ஆதீன கண்காணிப்பாளர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar