Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ... அயோத்தி ராமர் கோவில் துவஜாரோஹணம்; பூஜைகள் துவக்கம் அயோத்தி ராமர் கோவில் துவஜாரோஹணம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவிலில் ரூ.1 கோடியில் புனரமைப்பு பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவிலில் ரூ.1 கோடியில் புனரமைப்பு பணி

பதிவு செய்த நாள்

22 நவ
2025
04:11

உத்திரமேரூர்; கருவேப்பம்பூண்டியில், விஸ்வநாதர் கோவிலில், 1.14 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.


உத்திரமேரூர் தாலுகா, கருவேப்பம்பூண்டி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவில் 1,000 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு, மாசிமகம், சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். இந்த கோவில் முறையாக பராமரிப்பு இல்லாததால், மூலவர் சன்னிதி, அம்பாள் சன்னிதி, உப சன்னிதிகள், மகா மண்டபம், சுற்றுச்சுவர் ஆகியவை சிதிலமடைந்து இருந்தது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 -–- 25ம் நிதி ஆண்டில், கோவில் பொதுநிதியின் கீழ், 1.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சீரமைப்பு பணிகள், எட்டு மாதத்திற்கு முன் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. கோவிலை பழமை மாறாமல் மூலவர் சன்னிதி, மகா சன்னிதி, அம்பாள் சன்னிதி ஆகியவை கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் கோவில் 1.14 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. மூன்று மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar