Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடையில் ஸ்ரீ சத்யசாய்பாபா நூறாவது ... ஸ்ரீ சத்யசாய்பாபா பிறந்தநாள் விழா; கோவையில் கோலாகலம் ஸ்ரீ சத்யசாய்பாபா பிறந்தநாள் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

24 நவ
2025
10:11

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பி வழிபட்டனர். 


 திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா,  கொடியேற்றத்துடன் முதல் நாள் விழா தொடங்கியது.   இதையொட்டி, இன்று  அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன், மற்றும் உற்சவர்கள்  பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு  சிறப்பு அபி ேஷகம் மற்றும் சிறப்பு பூஜை  செய்யப்பட்டு, பஞ்ச மூர்த்திகள், சுவாமி தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட   சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க,  63 அடி உயர  தங்க கொடி மரத்தில்,   கொடியேற்றம் நடந்தது.  அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து, அறியாமை என்னும்  இருளை போக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விழாவாக கொண்டாடப்படும் முதல் நாள் விழாவில், காலை,  10: மணி அளவில், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இரவு, 9:00 மணிக்கு, விநாயகர் மூஷிக வாகனம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மயில் வாகனம், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வெள்ளி அதிகார நந்தி வாகனம், பராசக்தி அம்மன் ஹம்சம் வாகனம், சண்டிகேஸ்வரர், சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.   தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும்  விழாவில்,  ஏழாம் நாளான, வரும், 30ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம்,  வரும், டிச., 3ல்,  அதிகாலை, 4:00,  மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00, மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.  

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar