Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தியில் பறந்தது காவி கொடி; ... அடாத மழையிலும் விடாது நெல்லையப்பருக்கு நடக்கும் பூஜை; வெள்ள நீரில் நீந்தி சென்று தீர்த்தம் எடுத்த அர்ச்சகர்கள் அடாத மழையிலும் விடாது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விக்ரஹம் பிரதிபலிக்கும் நான்கு நற்குணம்; சிருங்கேரி ஜகத்குரு அருளுரை
எழுத்தின் அளவு:
விக்ரஹம் பிரதிபலிக்கும் நான்கு நற்குணம்; சிருங்கேரி ஜகத்குரு அருளுரை

பதிவு செய்த நாள்

25 நவ
2025
12:11

நான்கு குணங்களை கொண்ட விக்ரஹத்தை வழிபடுவதன் வாயிலாக, நல்ல குணங்கள் பக்தர்களுக்கும் கிடைக்கும்,”என, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் அருளுரை வழங்கினார். டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சுவாமிகள், உத்தர குருவாயூரப்பன் கோயிலுக்கு விஜயம் செய்தார். கேரள பாணியில் கட்டப்பட்டிருக்கும் கோயிலில், குருவாயூரில் பூஜை நடப்பது போல நித்யபூஜை நடப்பதை பாராட்டினார். 


அந்நிகழ்ச்சியில், சிருங்கேரி ஜகத்குரு பக்தர்களுக்கு வழங்கிய அருளுரை: விக்ரஹம் என்பதற்கு நான்கு குணங்கள் உள்ளன. ஒன்று, விக்ரஹம் யார் மீதும் வேற்றுமை பாராட்டாது; விருப்பு, வெறுப்பு அற்றது. இரண்டாவது, யாரிடமும் யாசகம் கேட்காது. மூன்றாவது எதற்கும் மற்றவர் பேரில் அபிப்ராயமோ, கண்டனமோ தெரிவிக்காமல் இருப்பது. நான்காவது, ஒருவருடைய அழைப்பு இல்லாமல் உற்ஸவ விக்ரஹம் வெளியே செல்வது இல்லை. இத்தகைய நால்வகை நற்குணங்களை பிரதிபலிக்கும் விக்ரஹத்தை, தொடர்ந்து வழிபடுவதால், நல்ல குணங்கள் பக்தர்களுக்கும் கிடைக்கும். அறிவற்றவன் எவ்வாறு இருப்பான் என்பதை, காளிதாசர் தன் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். சாப்பிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் அலைபவன், பேசும்போது உரக்க சிரிப்பவன், கடந்த காலத்தை சதா நினைத்துக் கொண்டிருப்பவன், இருவர் பேசும் போது உள்நுழைபவன், தனக்கு ஏற்பட்ட நல்லதை நினையாமல் இருப்பவன், பொதுவெளியில் ஒருவரை விமர்சிப்பவன் போன்ற குணங்கள் கொண்ட ஒருவனே அறிவற்றவன். பக்தர்கள் ஒவ்வொருவரும், ஒழுக்கமானவராகவும், அறிவில் சிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அருளாசி வழங்கினார். முன்னதாக, கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த மண்டல பூஜை ஏற்பாடுகளை பார்வையிட்ட சுவாமிகள், மயூர் விஹார் சுப சித்தி விநாயகர் கோயிலில் விநாயக பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தார். லலிதாம்பிகை கோயிலில் புதிய ஸ்ரீ சக்கர மேருவினை பிரதிஷ்டை செய்தார்.   – நமது நிருபர் – 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar