ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றி வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2025 01:12
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று இரவு 11:00 மணிக்குமேல் கோபால விலாசத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் பெரியாழ்வார் உட்பட 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். அவர்களுக்கு 108 போர்வைகள் சாற்றி, வாசுதேவ பட்டர், ராஜா பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். அரையர் பாலமுகுந்தனின் அரையர் சேவையும், வேதபிரான் சுதர்சனன் கைசிக புராணம் வாசித்தாலும் நடந்தது. பின்னர் இன்று காலை 9:00 மணி வரை நடந்த உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.