Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொக்கணீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி ... திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமாவர 1008 சங்காபிஷேகம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனம் ஞானபீடம் அமர்ந்த நாள் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனம் ஞானபீடம் அமர்ந்த நாள் விழா

பதிவு செய்த நாள்

09 டிச
2025
12:12

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். இவர் ஞானபீடத்தில் அமர்ந்த நாளையொட்டி ஞானபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு ஹோமம், ருத்ராபிஷேகம், 108 சங்காபிஷேகம் ஆகியவை நடந்தது. அதனையொட்டி நேற்று காலை சொக்கநாதருக்கு 108 சங்காபிஷேகம் செய்து குருமகா சந்நிதானம் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். பின்னர் ஞானபுரீஸ்வரர் கோயிலில் நடந்த சிறப்பு ஹோமம் பூர்ணாஹுதியாகி ஞானபுரீஸ்வரர் சுவாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது.  இதனை அடுத்து  27வது குருமகா சந்நிதானத்திற்கு ஞானாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 27வது குருமகா சந்நிதானம் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வர், துர்க்கை அம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை ஆகியவை செய்து வழிபாடு மேற்கொண்டு மதியம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஞானகொலுக் காட்சியில் எழுந்தருள கட்டளை தம்பிரான் சுவாமிகள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.  


தொடர்ந்து குருமகா சந்நிதானம் வழுவூர் ராமலிங்க சிவாச்சாரியாருக்கு 10 ஆயிரம் பொற்கிழி வழங்கி அருளானி வழங்கினார்.  மதியம் மகேஸ்வர பூஜையும், தருமபுரம் குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை குருமகா சந்நிதானம் வழங்கினார். இதில் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், மாணிக்காவசக தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆதீன பொதுமேலாளர் ரங்கராஜன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar