Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணியக்காரன்பட்டியில் பூக்குழி ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அறவே இல்லை அடிப்படை வசதிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அறவே இல்லை அடிப்படை வசதிகள்

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
01:01

ஒட்டன்சத்திரம்: பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குடிநீர், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பழநியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்கு ஆண்டுதோறும் காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் தைப்பொங்கலுக்கு முன்பே பழநிக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு முன்கூட்டியே பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படும் நிலை தொடர்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் மூலம் பக்தர்களுக்கு குழந்தை வேலப்பர் கோயில், ஒட்டன்சத்திரம் – பழநி இடைப்பட்ட இடங்கள், ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்விளக்குகள் அமைத்து கொடுக்கின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்கு குளிக்கும் இடம், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். இந்த அடிப்படைத் தேவைகளை தைப்பொங்கலுக்கு முன்னர் வரும் பக்தர்களும் பயன்படுத்தும் வகையில் முன்கூட்டியே செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் வெளியே பக்தர்களின் நடைபாதையில் குப்பை கொட்டி வைத்துள்ளனர். நடைபாதை பாதி இடங்களில் காணாமல் போய்விட்டது. இருக்கும் நடைபாதையிலும் குப்பை கொட்டியும் நாற்காலிகளை போட்டும் ஆக்கிரமித்துள்ளனர்‌. செடி கொடிகள் முளைத்துள்ளதால் இரவு நேரத்தில் நடப்பது சிரமமாக உள்ளதால் பக்தர்கள் தவிக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar