திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு நடராஜர் சபையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சா ஆவரன பூஜை, வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று காலை நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சோடசோபவுபச்சார தீபாராதனை, திருவம்பாவை பாடப்பட்டு சுவாமி வீதி உலா நடக்கிறது.