Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தெப்பத்தேரில் பவனி வந்து ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜர் திருவீதி உலா திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நாதஸ்வர, தவில் சங்கீத உற்சவம்
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நாதஸ்வர, தவில் சங்கீத உற்சவம்

பதிவு செய்த நாள்

03 ஜன
2026
03:01

பாலக்காடு; குருவாயூர் கோவிலில் நாதஸ்வரம், தவில் சங்கீத உற்சவம் உற்சவம் கோலாகலமாக நடந்தது.


கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 2022 முதல் தேவஸ்தானம் சார்பில் நாதஸ்வரம், தவில் சங்கீத உற்சவம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, நான்காவது நாதஸ்வரம், தவில் சங்கீத உற்சவம் நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. முதலில் நாதஸ்வர, தவில் கலைஞர்களின் மங்கள வாத்திய சமர்ப்பணம் நடந்தது. மூலவரின் சன்னதி முன் நடந்த இந்த நாதார்ச்சனையில் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு நடந்த நாதஸ்வர பஞ்சரத்ன கீர்த்தனை இசை ஆர்வலர்களை வெகுவாக ஈர்த்தது. மதியம், 12:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் சங்கீத உற்சவத்தை கேரளா சங்கீத நாடக அகாதமி தலைவர் மட்டன்னூர் சங்கரன்குட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், குருவாயூரப்பன் நாதபிரம்மம் விருது பிரபல நாதஸ்வர கலைஞர் வெட்டிக்கவல சசிகுமாருக்கும் வில்லுப்பாட்டு கலைஞர் ஓச்சிறா பாஸ்கரனுக்கும் வழங்கப்பட்டது. தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். கேரள கலாமண்டலம் முன்னாள் துணைப் பதிவாளர் கலாதரன், கோவில் நிர்வாக குழு உறுப்பினர் விஸ்வநாதன், நாதஸ்வரக் கலைஞர்களான குருவாயூர் முரளி, ஆறன்முள ஸ்ரீகுமார், சவரா கண்ணன், அஜித் பேரகம், துணை மேலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar