Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவாபுரி முருகனை 3 மணி நேரம் ... திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற பெண்கள் கைகளில் விளக்கேற்றி வழிபாடு திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழா: ஆயிரக்கணக்கானோர் இசையஞ்சலி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழா: ஆயிரக்கணக்கானோர் இசையஞ்சலி

பதிவு செய்த நாள்

07 ஜன
2026
10:01

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள், பகுள பஞ்சமி தினத்தில் முக்தியடைந்தார். முக்தியடைந்த இடத்தில், ஆண்டுதோறும், பகுள பஞ்சமி தினத்தில், ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். 


இந்தாண்டு, தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழா, கடந்த ஜன.3ம் தேதி துவங்கியது. நாள்தோறும் காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை, இசை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிழ்வான ஆராதனையை முன்னிட்டு, இன்று(7ம் தேதி) அதிகாலை, தியாகராஜ சுவாமி வாழ்ந்த திருமானஞ்சன வீதியில் உள்ள வீட்டில், இருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டாகி, மேள தாளங்கள் முழங்க, வீதியுலவாக, சன்னதிக்கு வந்தனர். பிறகு, நாதஸ்வரம் நிகழ்ச்சியும், பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது. இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, கடலுார் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், உள்ளிட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் என ஆயிரக்கணக்கனோர், நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் என பஞ்ச ரகங்களில் ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீசத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விழா இரவு 11:20 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar