Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீவனுார் பொய்யாமொழி விநாயகர் ... திருப்பரங்குன்றம் தீபத்துாணும்.. தினமலர் நாளிதழும்..! திருப்பரங்குன்றம் தீபத்துாணும்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை: 312 சவரன் எங்கே? பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை: 312 சவரன் எங்கே? பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

07 ஜன
2026
11:01

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் புதிய உற்சவர் சிலை செய்ய 312 சவரன் தங்கம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டதும், ஆனால் சிலைகளில், துளி கூட தங்கம் இல்லை என்ற விபரமும் அம்பலமாகி உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பயன்பாட்டில் உள்ள உற்சவர் சிலை தொன்மையானது. இச்சிலை, 2015ல் சேதமானதால், புதிதாக சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி ஆகிய இரு உற்சவர் சிலைகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செய்தது. அதில் தங்க மோசடி நடந்திருப்பதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின்படி, சிவகாஞ்சி போலீசார், 2017ல் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, கோவில் அர்ச்சகர்கள் என, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு உடனடியாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்தது. சிலைகள் செய்தபோது, 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும் என்பது விதி. அதாவது, 8.7 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், ‘இரு புதிய சிலைகளிலும், தங்கம் சேர்க்கப்படவில்லை’ என, ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்ததில் தெரியவந்தது. இவ்வழக்கில், ஹிந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, அர்ச்சகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு அடுத்தகட்ட நகர்வு இல்லாமல் முடங்கியது. மீண்டும் சிவகாஞ்சி போலீசாரே இவ்வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், 2023ல், சிவகாஞ்சி போலீசார் இவ்வழக்கை விசாரித்தனர். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், சிவகாஞ்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில், கோவில் செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த ஸ்தபதி மாசிலாமணி ஆகிய இருவரை நீக்கியும், ஹிந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஆகிய இருவரை சேர்த்தும், சிவகாஞ்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே, 2017ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, 2023ல் சிவகாஞ்சி போலீசாரால் திருத்தப்பட்டுள்ளது. அந்த திருத்தப்பட்ட நகல், மனுதாரரான அண்ணாமலைக்கு, தற்போது வழங்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், 312 சவரன் தங்கம் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டதாகவும், ஆனால், ஐ.ஐ.டி., சார்பில் ஆய்வு செய்ததில், துளி தங்கம் கூட இல்லை எனவும், திருத்தப்பட்ட எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வழக்கு, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்த டிச., 30ம் தேதி, முதன்முறையாக விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அடுத்த விசாரணையை, பிப்., 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. பக்தர்களிடம் நன்கொடை பெற்ற, 312 சவரன் நகைகளின் தற்போதைய மதிப்பு, 3.12 கோடி ரூபாய்.


ரசீது ஏதும் கிடையாது; வீடியோவும் இல்லை!


உற்சவர் சிலை தயாரிப்பு, தங்கம் நன்கொடை தொடர்பாக, தினேஷ் என்ற பக்தர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் அளித்த பதிலில், ‘கடந்த 2015ம் ஆண்டில் சுவாமி மலையில், மாசிலாமணி என்ற ஸ்தபதியால், புதிய உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. சிலை செய்தபோது வீடியோ ஏதும் எடுக்கவில்லை. பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தங்கத்திற்கு ரசீது ஏதும் போடவில்லை’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், பக்தர்களிடமிருந்து 312 சவரன் நகைகளை, எந்த அடிப்படையில் அறநிலையத்துறையினர் பெற்றனர் என்ற கேள்வி எழுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar