ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2026 12:01
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீமாணிக்கவாசகர் மன்றம், அர்த்த ஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், சோமவாரம் தோறும், சிவாலயங்களில் திருவாசகம் பாராயணம் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும், மூன்றாவது திங்கட்கிழமை, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் திருவாசக முற்றோதல் நடக்கிறது. அவ்வகையில், சிவனடியார்கள், திருக்கூட்டத்தினர் திரளாக பங்கேற்ற முற்றோதல் நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு சிறப்பு வழிபாட்டுடன் துவங்கி, 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களும் பண்ணிசையுடன் பாராயணம் செய்யப்பட்டது.