Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் ... பரமக்குடி அங்காளம்மன், வாணி கருப்பணசாமி பால்குட விழா பரமக்குடி அங்காளம்மன், வாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரமாக மாறப்போகும் மேட்டுப்பாளையம் சுந்தர விநாயகர் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுந்தரமாக மாறப்போகும் மேட்டுப்பாளையம் சுந்தர விநாயகர் கோவில்

பதிவு செய்த நாள்

19 பிப்
2026
03:02

மேட்டுப்பாளையம்: மூலிகை ஓவியங்கள் கொண்ட, பழமையான சுந்தர விநாயகர் கோவில், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


மேட்டுப்பாளையம் சொக்கலிங்கம் சந்து வீதியில், பழமையான சுந்தர விநாயகர் கோவில், காரமடை குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில் அதிகாரியின் கட்டுப்பாட்டில், இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் உள்ளது. கட்டடங்கள் மிகவும் பழமை வாய்ந்து இடியும் தருவாயில் உள்ளது. கோவிலில் மூலிகைகளால் வரையப்பட்ட முருகன், விநாயகர், மகாலட்சுமி, கருடன், சிவன் உட்பட 10க்கும் மேற்பட்ட கடவுள்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்து அறநிலையத்துறை சார்பில், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தை வேலாயுதசுவாமி செயல் அலுவலர் வனிதா கூறுகையில், ‘‘ரூ.47 லட்சம் மதிப்பில், கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கி நடத்து வருகிறது,’’ என்றார். இப்பகுதியின் 5வது வார்டு கவுன்சிலர் விஜய காண்டீபன் கூறுகையில், ‘‘கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, தமிழக முதல்வரிடம் மனு அளித்தேன். அதனடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பழமையான கோவிலில், மூலிகை ஓவியங்கள் இன்றும் அப்படியே காட்சியளிக்கிறது. இவை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar