அய்யலூரில் இருந்து சமயபுரத்திற்கு ஒரே குழுவாக 7000 பேர் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2026 04:02
வடமதுரை; அய்யலூரில் இருந்து ஒரே குழுவாக 7000 பேர் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
அய்யலூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது 37ம் ஆண்டாக அய்யலூர், வடமதுரை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 5500 பேர் கடந்த மாதம் முதல் கையில் காப்பு கட்டி விரதமிருக்க துவங்கினர். இவர்கள் இன்று மதியம் அய்யலூர் களர்பட்டி ஆதிபராசக்தி கோயிலில் குருசாமி பிச்சை தலைமையில் சிறப்பு வழிபாடு செய்த பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்தபடி சமயபுரம் புறப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக சுமார் 1500 பேர் என ஒரே குழுவாக 7000 பேர் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்கள் ஞாயிறுயன்று சமயபுரத்தில் தரிசனம் செய்து ஊர் திரும்புவர்.