புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த பூவாலை அங்காளம்மன் கோவிலில் 29 ம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.
விழா கடந்த 17 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 18 ம் தேதி மாலை 3.00 மணிக்கு சுவாமி வீதியுலா, இரவு 10.00 மணிக்கு இருளமுகம், உச்சிக்கொப்பறை, காட்டேரி உடன் மயானம் செல்லுதல் நடந்தது. சிறப்பு விழாவான மயானக்கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது. அதையொட்டி காலை 8.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. மாலை 6.00 மணிக்கு மயானக்கொள்ளை உற்சவமும், 20 ம் தேதி (நாளை) காலை 9.00 மணிக்கு மஞ்சள் விளையாட்டு விழா, இரவு 9.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.