Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிப்.23ல் வீடுகள், வீதிகள் தோறும் ... வேடகிரி சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் திருவீதியுலா வேடகிரி சிம்ம வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி; சர்வதீர்த்த குளக்கரை நடைபாதையில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றம்
எழுத்தின் அளவு:
தினமலர் செய்தி எதிரொலி; சர்வதீர்த்த குளக்கரை நடைபாதையில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
04:02

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில், ‘டைல்ஸ்’ பதித்த சர்வதீர்த்த குளத்தின், நடைபாதையில் வளர்ந்திருந்த செடிகளை ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்தினர் நேற்று வேருடன் அகற்றினர்.


காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகில் உள்ள சர்வதீர்த்த குளம் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி விரிசல் ஏற்பட்டும், நடைபாதையில் செடிகள் வளர்ந்து குளக்கரை சீரழிந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், 34 லட்சம் ரூபாய் செலவில் குளக்கரை நடைபாதைக்கு, ‘டைல்ஸ்’ பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால்,, சர்வதீர்த்த குளம் புதுப்பொலிவு பெற்றது. இப்பணி நடந்து முடிந்து இரு மாதங்களே ஆன நிலையில், ‘டைல்ஸ்’ பதிக்கப்பட்டுள்ள நடைபாதையில் செடிகள் வளர்ந்து இருந்தது. இச்செடிகளின் வேர்களால் நாளடைவில் ‘டைல்ஸ்’களில் உடைப்பு ஏற்பட்டு, நடைபயிற்சி மேற்கொள்வோர், நடைபாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து, ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், சர்வதீர்த்த குளக்கரையில் ‘டைல்ஸ்’ பதித்த நடைபாதையில் வளர்ந்திருந்த செடிகள் நேற்று வேருடன் அகற்றப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar