திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே அங்காளம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 15ம் தேதி சந்தனக்காப்பு அலங்காரத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து 9ம் நாள் திருவிழாவையோட்டி நேற்று மதியம் தேரோட்டம் நடந்தது. மேலும், துலங்கம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும் நேர்த்திக்கடனாக நெல், புளியங்களாய், காய்கறி மற்றும் தானிய வகைகள் குறை விடப்பட்டது.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ் பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.