பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனுாரில், மசினி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.
மங்கள வாத்தியம், தீர்த்தம் எடுத்து வருதல், முதல் கால வேள்வி, 108 திரவியம் கொண்டு சிறப்பு பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அஷ்ட பந்தன மருந்து சாற்றல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி, திருமேனி உயிர்பித்தல், தீபாராதனை, 11:00 மணிக்கு கும்ப கலசம் புறப்பாடு, விமான கோபுரம் நன்னீராட்டு, 11:45க்கு, மசினி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம், தீபாராதனை, மதியம் அன்னதானம் நடத்தப்பட்டது. காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.