Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகாளியம்மன் திருவிழா: இன்று சுவாமி ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி மண்டபம் திறப்பு விழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவை மறந்தவனுக்கு எப்பயனும் இல்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவை மறந்தவனுக்கு எப்பயனும் இல்லை

பதிவு செய்த நாள்

26 பிப்
2026
02:02

மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என மதுரையில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் சூரியனார் கோயில் ஆதின தேசிக மஹா சுவாமிகள் பேசினார்.


மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் வளாகத்தில் எண்மர் போற்றும் எண் குணத்தான் எனும் இசையரங்கம், உரையரங்கம் நடந்தது. நேற்று மீளா அடிமை உமக்கே ஆனாய் எனும் தலைப்பில் சூரியனார் கோயில் ஆதின தேசிக மஹா சுவாமிகள் இசை அருளுரை வழங்கினார்.


அவர் பேசியதாவது: பாண்டிய மன்னனுக்கு மதுரையின் எல்லை குறித்து தெரியவில்லை. சொக்கநாதரிடம் வேண்டிய போது, சொக்கன் அவரது அணிகலனாகிய வாசுகி பாம்பு (ஆலம்) தனது வாலை வாயால் கவ்வி வட்டமிட்டு மதுரையின் எல்லையைக் காட்டியதால் இத்தலத்திற்கு ஆலவாய் எனப் பெயர் ஏற்பட்டது. இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலப் பெயராகவும் விளங்குகிறது.


புண்ணியம் வைராக்கியம் உள்ளவர்கள் கோபத்தில் எடுக்கும் சத்தியம் பலிக்கும். திருஞானசம்பந்தரை 12 வயதில் சமணர்கள் அழிக்க சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் அவரோ, சொக்கன் என்னை காப்பாற்றுவார் என உறுதியாக நம்பினார். அவரின் கோபம் தான் எதிரிகளை அழித்தது. ஆழமாக கடவுளை நம்பினால் மட்டுமே இறையருள் கிடைக்கும்.


ரிக் வேதத்தில் இரண்டு ஸ்வரங்களாக வரும், இதை தமிழில் புகுத்தியவர் திருஞானசம்பந்தர். மூவர் தேவாரம் முழுவதும் பாடினால், ஐந்து ஆண்டுகளாகும். ஒருவன் தன் குருநாதரை மறந்து விட்டால், என்ன செய்தாலும் அவன் வாழ்வில் ஒரு பயனும் கிடைக்காது. குருவை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும் இவ்வாறு பேசினார்.


இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு நேற்றுடன் நிறைவடைந்தது. ஏற்பாடுகளை சிருங்கேரி சாரதா பீடம் நிர்வாகிகள் செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar