Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமந்தபுரம் சிங்கபெருமாள் ...  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 1.26 கோடி உண்டியல் காணிக்கை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
 மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2026
10:02

பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது பிரசித்தி பெற்ற மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லாம் ஆண்டும் மாசி மாதம் வேல என்ற பெயரில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பித்தனர். தொடர்ந்து 6.30க்கு நாதஸ்வர கச்சேரி, 7க்கு பரிவார பூஜை, 9 க்கு கல்லூர் உன்னிகிருஷ்ணன் மாரார் தலைமையில் பஞ்சாரிமேளம் என்று அழைக்கப்படும் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட செண்டை மேளம் முழங்க ஏழு யானைகள் அணிவகுப்பு உடன் நடந்த காழ்ச்சீவேலி நடந்தன. 10க்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடந்தன. 11.30 க்கு மேற்கு யாக்கரை ஸ்ரீமூலஸ்தானத்தில் இருந்து அம்மனின் வாளும் பீடமும் எழுந்தருளும் வைபவம் நடந்தது. தொடர்ந்து 12.30 அம்மனுக்கு பூர்ண சந்தாபிஷேகம் நடைபெற்றது.

மாலை 3.45 மணிக்கு மணப்புள்ளி பகவதி அம்மன் கோவிலில் இருந்து 15 யானைகளின் அணிவகுப்பு உடன் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 5 மணி அளவில் திருவிழாவின் சிறப்பு அம்சமாக கோட்டைமைதான வாசலில் கிழக்கு நோக்கியவாறு கோங்காடு மதுவின் தலைமையில் பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த 15 யானைகள் அணிவகுத்து நின்று பிரம்மாண்ட முத்துமணி வண்ணக் குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இதன் இடையே மேற்கு யாக்கரை, கொப்பம், வடக்கந்தரை, முட்டிக்குளங்கரை, கள்ளிக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து உள்ள 15 யானைகளின் அணிவகுப்பு கோட்டை மைதானத்தில் நடந்தது. இரவு வானவேடிக்கையுடன் விழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட எல்லா விசேஷ நாட்களிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar