கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2026 07:02
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கி அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளினார். பஜனை குழுவினர் பஜனை பாடினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.