பதிவு செய்த நாள்
28
பிப்
2026
07:02
‘செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 66 லட்சம் ரூபாய் காணிக்கை இருந்தது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் சக்திவேல், கள்ளக்குறிச்சி ரமேஷ், அறங்காவலர் குழுத் தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவார்த்திகள் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள், 66 லட்சத்து 97 ஆயிரத்து 356 ரூபாய் ரொக்கமும், 77 கிராம் தங்கமும், 730 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கீதா, மேலாளர் சதீஷ், கணக்காளர் மணி மற்றும் கோவில் ஊழியர்கள் உடனிருந்தனர்.