வல்லபை ஐயப்பன் கோயிலில் பொதுத்தேர்வு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2026 01:03
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு எழுதுவதை முன்னிட்டு நேற்று காலையில் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் ஐயப்பன் சன்னதி முன்பு நின்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கோயில் தலைமை குருசாமி மோகன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தேர்வு எழுதுவதற்கு முன்பாக எழுது பொருள்கள் உள்ளிட்ட பொருட்களை பூஜையில் வைத்து பூஜித்தனர். அதிக மதிப்பெண் பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு காலங்களில் மாணவர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.