செங்கழுநீர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2026 01:03
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது.
பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் மாரியம்மன், செல்வ விநாயகர், திருமுறைநாயகி உடனுறை ஜோதி லிங்கேஸ்வரர், சிவகாம சுந்திரி உடனுறை ஆனந்த நடராஜர், பக்த ஆஞ்சநேயர், குடிதாங்கி அம்மன், பரந்துகட்டி ஐய்யனார், ஐயப்பன், கோகுல கண்ணன் கோவில்களின் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு நடந்தது.
இக்கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபி ேஷக நிறைவு விழா (சம்பத்சாரா அபிேஷக விழா) நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 8:30 மணிக்கு தேவதா அனுக்ஞை எஜமானர் சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, 108 சங்கு பூஜை நடந்தது. காலை 11:00 கலசாபிஷேகம், செங்கழுநீர் அம்மனுக்கு 108 சங்காபிேஷகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி உதவி பொறியாளர் பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.