Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணம் முடிந்தது ராமேஸ்வரம் ... மாரியூர், சாயல்குடியில் மாசி மகம் வருண பூஜை, தீப ஆரத்தி; பக்தர்கள் பங்கேற்பு மாரியூர், சாயல்குடியில் மாசி மகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா 1,200 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழா 1,200 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

04 மார்
2026
08:03

சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா நடப்பது வழக்கம். பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இவ்விழாவில், லட்சக்கணக்கானோர் நேற்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதே நேரத்தில், மீனம்பாக்கம் கன்டோன்மென்ட் மைதானத்தில், ‘பாரதிய சம்ஸ்கிருதி சங்கம்’ சார்பில், நேற்று ஆற்றுக்கால் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப் பட்டது. சுனந்தன் நம்பூதிரி தலைமையில் நடந்த இவ்விழாவில், சென்னை, புறநகரை சேர்ந்த, 1,200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமமும், பின் விருஷ, கோ, நாக பூஜைகளும் நடந்தன. காலை 9:00 மணிக்கு தேவி பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, சென்னை, கைரளி கலா சங்கம் சார்பில், பஞ்சாரி மேளம் கொட்டப்பட்டது. காலை 9:45 மணிக்கு, பொங்கல் அடுப்பிற்கு அக்னி அளிக்கப்பட்டு, லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சர் அன்பரசன், ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar