மேட்டுப்பாளையம் வைத்தியநாதர் கோவிலில் 63 நாயன்மார் சிலைகள் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2026 03:03
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரச மரத்து பிள்ளையார் கோவில் வீதியில் புதிதாக வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை ஒட்டி நேற்றைய தினம் பவானி ஆற்றில் இருந்து புனித நீர் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை புனித நீர் யாக சாலையில் வைக்கப்பட்டு அர்ச்சகர்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 63 நாயன்மார்கள் மற்றும் வைத்தியநாதர் மற்றும் தையல் நாயகி தாயாருக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.